பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சிக்காலத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறப்பட்டு ஒவ்வொரு துறைகளை தேர்ந்தெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும் தற்போது 3 வருடங்களுக்கு மேலாகியும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் வலியுறுத்தி பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் படையினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.