மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரியில் போர் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் முதன் முறையாக நேற்று தேசிய உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மேற்குலக நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தி வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் ரஷ்யாவை அழிப்பதே மேற்குலகின் நோக்கம் என்றும், உக்ரைன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற முயன்றதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி துணைப்படையில் இணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள புடின் அணிதிரட்டப்படும் அனைத்து குடிமக்களும் முழு ஆயுதப்படை அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இன்று முதல் அணித்திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.