பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் இன்று நிறைவு!
இலங்கையில் உள்ள காட்டுமிரண்டித்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி ஊர்தி வழியாக நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பெறும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஊர்தி வழியில் பயணித்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று அம்பாந்தோட்டையில் நிறைவு பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணி,சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.