Metz நகரில் துப்பாக்கிச் சூடு: மூவர் படுகாயம்: சந்தேகநபர் கைது!
Metz நகரில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் என Metz அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Metz நகரின் avenue de Thionville வீதியில் நடந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சந்தேகநபர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அரச வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “இது ஒரு படுகொலை முயற்சி” எனும் நோக்கிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.