பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று (25) முல்லைத்தீவு நீதவான் நீதீமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 04.01.2022 வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தர பிறப்பித்துள்ளார்.