ஜனாதிபதி பொம்மை, பொம்மலாட்டக்காரன் பஷில்.மஹிந்தவும் புடலங்காய் நிலையில்!
ஜனாதிபதி தற்போது ஒரு பொம்மை. அதனை ஆட்டுவிக்கும் பொம்மலாட்டக்காரன் பஷில். மஹிந்த ராஜபக்சவும் புடலங்காய் நிலையில் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்த அரசால் தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது. எனவே மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும். வாக்களித்த 69 லட்சம் மக்களிற்கும் சர்வதேச நாடுகளிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது. அரசு இதுவரை நிறைவேற்றிய ஒரு வாக்குறுதியையாவது வெளிப்படுத்த முடியுமா?
ஜனாதிபதி தற்போது ஒரு பொம்மை. அதனை ஆட்டுவிக்கும் பொம்மலாட்டக்காரன் பஷில். மஹிந்தவும் புடலங்காய் நிலமைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.