தென்மராட்சி மட்டுவில் புத்தூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் சனிக்கிழமை மஹிந்த ராஜபக்சவினால் திறக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு மத்திய நிலையத்தையும் வர்த்தக தொகுதியையும் வைபவ ரீதியாக திறந்துவைக்க உள்ளார்.
யாழ் மாவட்ட விவசாய உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாக மத்திய நிலையத்துடன் இணைந்ததாக முப்பதுக்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.