ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய பெண்கள் சக்தியினரால் “பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் போராட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/nTBP6gyxWxI
நேற்று காலை யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகிய பேரணி யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தினை சென்றடைந்தது. இதன் போது அரச ஆதரவுக் குழுவான அருண் சித்தார்த் என்பவரது தலைமையிலான சிறு குழுவினர் அமைதிப் பேரணியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதை அடுத்து பதற்றநிலை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருண் சித்தார்த் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் செருப்பினாலும் அடித்துள்ளனர். இந்நிலையில் சிரமத்தின் மத்தியில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட அருண் சித்தார்த் முச்சக்கர வண்டியில் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.
குறித்த பேரணி ஏழு நாட்கள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்று ஏழாவது நாள் கொழும்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப்பொதுச் செயலாளர் உமாசந்திர பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.