மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன்.நாகமணி அவர்களின் 25வது ஞாபகார்த்த தினமும் முதியோர் கெளரவிப்பும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
சனசமூக நிலையத் தலைவர் க.திவாகரன் தலைமையில், விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழர்களின் பண்பாட்டுக்கு அமைவாக மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.
இன்றைய நிகழ்வின் முதன்மை விருந்தினர் கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கனகராஜா மங்களவிளேக்றலை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான சாவகச்சேரி பிரதேசசபை சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.சுவீட்டா, மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி. த.பாலசுப்பிரமணியம் மற்றும் கெளரவ விருந்தினர் டென்மார்க் வாழ்,நிலைய அங்கத்தவரான கு.லிதராஜ் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததனர்.
தொடர்ந்து வளர்மதி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபரும், சமூகத்தின் முன்னோடியுமான த.அப்புத்துரை, வளர்மதி சனசமூக நிலைய செயலாளரும், வளர்மதிக் கல்விக்கழக பொறுப்பாசிரியருமான ச.கிருஷ்ணன் ஆகியோரும் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.
தொடர்ந்து வளர்மதி மாதர்சங்க தலைவி திருமதி.அ.டர்சிகா , வளர்மதி விளையாட்டுக்கழக பொருளாளர் க.அமலராஜ், மாணவர்கள் சார்பில் ஒருவர் மற்றும் இறுதியாக சனசமூக நிலையத்தலைவர் க.திவாகரனின் மங்கள விளக்கேற்றலுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
தொடர்ந்து வளர்மதி கல்விக்கழக மாணவர்களால் இறைவணக்கம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்தாபகர் அமரர் பொன்.நாகமணி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக வந்தோரை வரவேற்கும் தமிழரின் பண்பாட்டிக்கு அமைவாக விருந்தினர்களை வரவேற்கும் முகமாக வளர்மதி கல்விக்கழக மாணவிகளால் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் வரவேற்புரை வளர்மதி மாதர் சங்க உப செயலாளர் திருமதி.சி.சுபாஜினி அவர்களால் நிகழ்த்தப்ப்டடது.
தொடர்ந்து தலைவரின் தலைமையுரையோடு ஆரம்ப நிகழ்வு சிறப்பாக ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஸ்தாபகர் தினநிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் வளர்மதி வாழ் மக்கள், மாணவர்கள் , எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.
தகவல், படங்களும் – எமது இணையத்தள மட்டுவில் பிரதேச செய்தியாளர்