ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.