சந்திரிகா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமைப் பொறுப்பை வகிப்பார் எனவும் குமார வெல்கம, அர்ஜுண ரணதுங்க, அனுர பிரியதர்சனயாப்பா , சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் ஒருங்கிணைந்து செயற்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குமார வெல்கம ” எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி எமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தை பத்தரமுல்லையில் திறக்க தீர்மானித்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்துகொள்ள தீர்மானித்தால் அவருடனும் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். அனைவரும் சமத்துவமாக வாழும் அமைதியான சூழல் ஒன்றை கட்டியெழுப்ப சமூகத்தை வழிநடத்த அரசியல் கட்சி ஒன்று அவசியமாகிறது எனவும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.