IPL தொடரின் இன்றைய 5-வது லீக் போட்டி நரேந்திரமோடி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியை வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் – சகா களமிறங்கினர். 15 ரன்களில் சகா பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 31 ரன்னில் வெளியேறினார்.
நிதானமாக விளையாடிய சுதர்சன் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 17, மில்லர் 12, தெவாட்டியா 22 என வெளியேற இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து நமன் திர் 20 ரன்களுடன் வெளியேற ரோகித்- ப்ரீவ்ஸ் இணைஜோடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ரோகித் சர்மா 43 ரன்களுடனும், டெவால்ட் பீறீவ்ஸ் 46 ரன்களுடனும் வெளியேறினர்.
தொடர்ந்து திலக் வர்மா 25 ரன்களையும் டிம் டேவிட் 11 ரன்களுடனும், கார்த்திக் பாண்டியா 11 ரன்களுடனும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஜெரால்ட் கோட்சீ 1 ரன்னும் ஷாம்ஸ் முலானி 1 ரன்னுடனும் வெளியேறினர்.
இறுதியாக 2 பந்துகளில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில் களத்தில் பியூஸ் சாவ்ல, மும்ரா இணைஜோடியாக 1 ரன்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டனர்.
இறுதியாக 20 ஓவர் நிறைவில் 162 ரன்களைப் பெற்று குஜராத்திடம் வீழ்ந்தது. இருப்பினும் இறுதிவரை சளைக்காமல் விறுவிறுப்புடன் ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர் மும்பை இந்தியன்ஸ்.