பிரான்ஸை மிரட்டும் கொரோனாத் தொற்று, திணறும் அதிகாரிகள்!
பிரான்ஸில் திடீரென கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் ஒரு இலட்சத்து நான்காயிரத்து 611 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நாட்டினை முடக்காமல் சுகாதார நடைமுறைகளயும், தடுப்பூசிகளையும் பயன்படுத்தி கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த நினைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் திடீரென அதிகரித்த தொற்றாளர்களும் வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இட நெருக்கடியும் அதிகாரிகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து இன்று விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நாட்டினை முடக்காது சுகாதார நடைமுறைகளையும் தடுப்பூசி திட்டத்தினையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.