சக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு! ‘கொடூரமான கோழை’ என விமர்சித்த நீதிபதி!
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் சக மாணவிகளிடம் இரண்டு வருடமாக பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 24 வயதான ரன்பதி அமரசிங்க எனும் இளைஞனே குறித்த குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சக மாணவிகளிடம் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ அனுப்புமாறு வற்புறுத்தியதுடன் அவற்றை நன்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மறுப்பவர்களுடன் ஆரம்பத்தில் இருந்த தொடர்பு நிலை குறித்த ஆதாரங்களை குடும்பத்தினருக்கு அனுப்பப் போவதாக மிரட்டியுள்ளார். இவ்வாறு 2018 ம் ஆண்டு தொடக்கம் 2020 ம் ஆண்டு வரை ஈடுபட்டுவந்த நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் குறித்த இலங்கையர் மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தற்போது மேலதிக குற்றச்சாட்டுகளுடன் 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 25 குற்றச்சாட்டுகளையும் சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காணொளி ஊடாக நீதவானின் முன் முன்னிலையாகிய போது ‘கொடூரமான கோழை’ என நீதிபதி விமர்சித்திருந்தார். சந்தேக நபர் நாடுகடத்தப்படுவதற்கு முன் நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.