கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொலைசெய்து உரப்பையினுள் கட்டி பாலத்தின் அடியினுள் போட்டேன் என கொலையாளி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கபப்பட்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலையத்தில் மூதாட்டியைக் காணவில்லையென உறவினர்களால் முறையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞனை சந்தேகத்தில் கைது செய்தனர்.
தொடர்ச்சியாக அந்த இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையின் அடிப்படையில் குறித்த இளைஞன் தான் தான் கொலையாளி என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருந்தார்.
மதுவிற்கு அடிமையான குறித்த இளைஞன் நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
உரைப்பையினுள் ஓட்டுத்தூண்டுகளை போட்டு, அதனாலேயே மூதாட்டியை அடித்துக்கொன்றதாகவும், மூதாட்டியை உரைப்பையினுள் கட்டி நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் யூனியன் குளத்தினுள் உள்ள பாலத்திற்கு அடியில் போட்டதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.
அதனடிப்படையிலேயே, பொலிஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மூதாட்டியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மூதாட்டி லண்டனில் இருந்து மூன்று வருடத்திற்கு முன்னரே கிளிநொச்சியில் இருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் ஐந்து பிள்ளை்ளும் லண்டனில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.