இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக மண்டபம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் உள்ளிட்ட 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மண்டபம் வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வீதம் 34 மூடைகளில் 1,700 கிலோ கிராமும் மஞ்சள், தலா 30 கிலோ வீதம் 13 மூடைகளில் 400 கிலோ கிராம் சுறா இறகு மற்றும் பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ கிராம் ஆகியவையே பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.40 லட்சம் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கைக்கு இன்றிரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.