யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்த நிலையில், வீதியில் விழுந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) உயிரிழந்தார்.
இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார்.
இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.