பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் விஜயமாக இன்று (10) பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கான வரவேற்பு கலாச்சார நிகழ்வுகளுடன் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவினை நினைவுகூரும் வகையில், இளவரசியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளார்.
இளவரசியுடன், அவரது கணவரான வைஸ் அட்மிரல் திமோத்தி லோரன்ஸ் (Vice Admiral Sir Tim Laurence) உள்ளிட்ட 07 பேர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.
இவர்களை வரவேற்பதற்கு அமைச்சர் அலி சப்ரி, சீதா அரம்பேபொல, இலங்கைக்கான பிரித்தானிய அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.