வவுனியா போகஸ்வெவ மகா வித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்தச் சம்பவம் இன்று (17) காலை பாடசாலை பிரார்த்தனை வேளை இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக் கட்டடத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் ஆசிரியர் 12 பேர் பதவிய மருத்துவமனையிலும் 3 பேர் மாமடு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
20 இற்கும் மேற்பட்டோர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் காணப்பட்ட குளவி கூடு தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்காமையே இந்த அசம்பாவிதம் நிகழக் காரணம் எனப் பெற்றோர் விசனம் தெரிவித்தனர்.