ஏப்ரல் மாதத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு, இல்லையேல் அதிகார மாற்றம் என்கிறார் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!
நாட்டில் தற்போது நெருக்கடியான நிலை தோன்றியுள்ளது. இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மோசமான திட்டங்களால் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே வன்முறை தலை தூக்கியுள்ளது. மக்களை அடக்கி அரசாங்கத்தினை தொடர்ந்து நடாத்த முடியாது. இதனால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படும். இல்லையேல் அரசாங்கத்தினுள் அதிகார மாற்றம் நிச்சயம் ஏற்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் பொருளாதார திட்டங்களையும் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.