எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
புத்தளம் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புத்தளம் மணற்குன்று பகுதியை சேர்ந்த 63 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று முதல் தனது லொறியில் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 12.30 அளவில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.