37 வயது காதலனைத் தேடி இலங்கை வந்த 67 வயதான நெதர்லாந்து காதலி சடலமாக மீட்பு!
ரிக்ரொக் செயலி ஊடாக காதலித்து வந்த 37 வயதான இலங்கை காதலனைத் தேடி இலங்கை வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதான பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (24)சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் நெதர்லாந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை வந்து காதலனான சிங்கள இளைஞனுடன் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.