சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே… உங்கள் ராசிநாதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சில சிக்கல்களை ஏற்படுத்தலாம். நம்பி பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கை மோசம் செய்யக்கூடிய நிலை உருவாகும். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் வாங்கிய மனை இடத்திலிருந்த சிக்கல்கள் விலகும். பத்திரப்பதிவு செய்வீர்கள். புதன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். வழக்கறிஞர்கள் வாத திறமையால் பெரும் புகழடைவார்கள். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். கொட்டிக் கொடுத்தாலும் கும்பிட்டு அழைத்தாலும் தவறான மனிதர்கள் பேச்சை கேட்காதீர்கள். சுக்ரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். சந்தோஷத்தில் இருந்த குடும்பத்தில் சங்கடத்தை ஏற்படுத்த உறவுகளில் சிலர் உற்சாகமாக உள்ளடி வேலை செய்வார்கள். கவனமாக இருங்கள். சனி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். மல்லுக்கட்ட நினைக்கும் எதிரிகளை புல்லுக்கட்டை போல் தூக்கி வீசுவீர்கள். ராகு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். குலதெய்வம் கோயிலுக்கு சென்று நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். கேது 2 ஆம் வீட்டில் இருக்கிறார். அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருந்த பிரச்சனை வெடித்து காவல் நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். 19 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே… சூரியன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். முதலாளிகளின் அன்பை பெறுவது கடினம். ஆகவே அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை பார்க்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் சிலர் வேலை இழக்க வேண்டிய அபாயமும் ஏற்படலாம். சந்திரனின் நகர்வுகளால் சில நன்மைகள் நடந்தாலும் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்வது கடினம். ஆகவே கோபத்தை தூக்கி எறிந்து விட்டு இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிலைநாட்ட பாடுபடுங்கள். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். நீங்கள் எதிர்பார்த்த காரியம் நண்பர்கள் மூலமாக நிறைவேறும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதன் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வியாபாரத்தை பெருக்குவதற்காக புத்திசாலித்தனமாக நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அதன் மூலமாக நிலையான வருமானம் பெறுவீர்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியங்கள் சுலபத்தில் நடைபெறாது. ஏதாவது தடங்கள் ஏற்படும். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் இன்பம் பொங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிணக்குகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும். திட்டமிட்டு செலவு செய்யவில்லை என்றால் பணத்தட்டுப்பாடு பாடாய்படுத்தும். ராகு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். திருமண நிகழ்ச்சிகள் தள்ளிப் போகும் கேது ராசியில் இருக்கிறார் அளந்து பேசுங்கள் இல்லையென்றால் அவஸ்தைப்படுவீர்கள். 20,21 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே… சூரியன் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெளியிடத்தில் உங்களுடைய செல்வாக்கு கொடிகட்டி பறக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நீங்கள் விட்டில் பூச்சி போல தான். உங்கள் பேச்சுக்கு எந்த மரியாதையும் கிடைக்காது. அதற்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ளுங்கள். சந்திர பகவானின் இடப்பெயர்ச்சிகளால் ஏற்றமான பலன்களை காண்பீர்கள். வருமானம் பெருகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். சில இளம் தம்பதிகள் புரிந்துணர்வு இல்லாமல் பிரிந்து செல்வதற்காக கோர்ட் படிக்கட்டை மிதிப்பார்கள். உயர்ந்த மனிதர்களின் ஆலோசனையால் மன மாற்றங்களும் ஏற்படலாம். புதன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். ஒன்றுக்கு இரண்டாக லாபம் வரும் என்று ஆசை வார்த்தை காட்டி உங்களை ஏமாற்ற பார்ப்பார்கள். விழிப்போடு நடந்து அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். குரு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் விலகும். குதூகலம் மேலோங்கும். தனியார் துறை ஊழியர்கள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறுவார்கள். சுக்கிரன் 3 ஆம் வீட்டில் பயணிக்கிறார். கலைத்துறையினர் சில போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். திருமண நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகும். சனி 5 ஆம் வீட்டில் இருக்கிறார். பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீர்கள். புதிய வீடு கட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ராகு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். குலதெய்வம் கோயிலுக்கு செல்வீர்கள். கேது 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரியோர்களின் நல்லாசியால் அனுகூலம் கிடைக்கும். 22,23 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே… சூரியன் 3 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இன்பமும் துன்பமும் இணைந்து உங்கள் தோள்களில் அமர்ந்திருக்கின்ற வாரம் இது. நடக்காது என்ற நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும். எளிதாக நடந்து விடும் என்று திட்டமிட்ட செயல் இடையூறுகளை ஏற்படுத்தும். சந்திரனின் இடப்பெயர்ச்சி தொழிலுக்கு சாதகமாக அமையும். புதிய தொழில்களில் முனைப்பு காட்டலாம். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். திட்டமிட்ட திருமணங்கள் தள்ளிப் போகலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அதிகரித்து நிம்மதி இழக்க கூடிய அபாயம் உள்ளது. புரிந்து நடந்து கொண்டால் பிரிவினை வராது. புதன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். கூட்டுத்தொழில் அமோக லாபம் தரும். வியாபாரிகளுக்கு தடையில்லாமல் வருமானம் கிடைக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்ட காலமாக ஏக்கத்தோடு இருந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.. இனிமையாக பேசுங்கள். இனிமையாக பழகுங்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சனி 4 ஆம் வீட்டில் இருக்கிறார். முயற்சிகளுக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளை துணிவோடு துடைத்து எறிவீர்கள். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். கையிருப்பு கூடும். கேது 11 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆலய தரிசனம் செய்வீர்கள். 24,25 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.
தனுசு
வினைப்பயன் அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே… சூரிய பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். குவாரி நடத்துவதற்கான லைசன்ஸ் பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களை உங்களுடைய அணுக்கமான நடவடிக்கை மூலமாக அடைவீர்கள். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சந்திரனின் இடமாற்றங்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக இரவு பகலாக உழைப்பீர்கள். செவ்வாய் 1 ஆம் இடத்தில் பயணிக்கிறார். துணிச்சலோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்து போவீர்கள். புதன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள். பெற்றோர்களை பெருமைப்படுத்துவார்கள். குரு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமணங்கள் சிக்கல்களில் இருந்து விடுபட்டு சிறப்பாக நடந்தேறும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மனைவி பிள்ளைகளின் விருப்பமான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். சுக்கிரன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். இள வயது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மனதை புரிந்து கொண்டு இதயத்தை இடமாற்றிக் கொள்வார்கள். வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் கடுமையாக போராடி திருமணத்தை நடத்துவார்கள். சனி 3 ஆம் வீட்டில் இருக்கிறார். நிலம் விற்பனை உங்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கேது 10 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கேட்ட இடத்தில் சுணக்கம் இல்லாமல் பணம் கிடைக்கும்.