கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு பகுதியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் விபத்தினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் விபத்து இடம்பெற்றுள்ளது போன்ற தடயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.