IPL கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் போட்டிகள் இன்று (22) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தொடர்ந்து சம்பியனை தட்டிச்சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடமும் சம்பியனை தட்டிச் செல்லுமா என இரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் இன் தலைமையை இதுவரை காலமும் டோனி வழிநடத்தி வந்த நிலையில் இந்த வருடம் அந்த தலைமையை இளம் வீரர் ருதுராஜ் ஹெக்ய்வாட் இடம் கொடுத்துள்ளது இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.