மின்சார கட்டணத்தில் கட்டுப்பாடு மக்ரோன் உறுதி!
மின்சாரக்கட்டண விலையேற்றத்தின் மீது கட்டுப்பாடு கொண்டுவருவோம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இருந்து சூழலியல் மாற்றம்’ குறித்து நாட்டுமக்களுக்கு
உரையாற்றியிருந்தார். பொது போக்குவரத்து, மின் உற்பத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரையாற்றியிருந்த அவர், மின்சார கட்டண உயர்வு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில், வரும் ஒக்டோபர் மாதத்தில் மின்சார கட்டணத்தின் மீது கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என உறுதியளித்தார். மின்சார உற்பத்திச்
செலவு, வாங்கும் செலவு அதன் விற்பனைவிலையுடன் ஒத்து இருக்கும் எனவும், இலாபமற்ற முறையை கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.