மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே…. சூரியன் உங்கள் ராசியில் இருக்கிறார். எடுத்த காரியங்களை எந்தவித சிரமமும் இல்லாமல் நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களால் உறவினர்களும் நண்பர்களும் பாராட்டுவார்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சியால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கூட்டுத்தொழில் சிறப்பான முன்னேற்றத்தை கொண்டு வரும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். கமிஷன் வியாபாரத்தில் சிக்கலை எதிர்நோக்குவீர்கள். ஐ டி ஊழியர்கள் வேலை இழக்கலாம். வியாபாரம் மந்தமான நிலையில் இருக்கும். புதன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில்துறையில் மாற்றத்தை கொண்டு வருவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள். குரு 4 ஆம் வீட்டில் இருக்கிறார். உங்களை வீழ்த்த எதிரிகள் திட்டம் போடுவார்கள். எச்சரிக்கையாக இருந்து வெற்றி பெற வேண்டும். சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சகோதரருக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். இல்லற வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை பெறுவீர்கள். சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிரிகளை முறியடிப்பீர்கள். கேது 9 ஆம் வீட்டில் இருக்கிறார். தந்தையார் மூலம் பணவரவு உண்டாகும்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே… சூரியன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார் . வீணான விவகாரங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே பழக்க வழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். சந்திரனின் சஞ்சாரங்கள் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வரும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். பழைய வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். வேலை தேடி வெளிநாடு செல்வீர்கள். புதன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். குரு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்கள் வெற்றிகரமாக அமையும். ஆன்லைன் வர்த்தகங்கள் சூடு பிடிக்கும். தொழிலில் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். திருமண காரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்கள் சந்திப்பால் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். சனி ராசியிலேயே அமர்ந்து இருக்கிறார். அலைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களில் உடல் சோர்வு உண்டாகும். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் பணச் செலவு உண்டாகும். கேது 8 ஆம் வீட்டில் இருக்கிறார். கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்வீர்கள்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே…. சூரியன் 11 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். முகம் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் பெறுவீர்கள் அரசு ஊழியர்கள் பதவி உயர்வு அடைவீர்கள். சந்திரனின் நகர்வுகள் சில யோகமான பலன்களை தரும். வியாபாரம் வெற்றிகரமாக நடந்து லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்ப்புகளை மீறி நினைத்ததை சாதிப்பீர்கள். அரசு ஊழியர்கள் அக்கறையுடன் வேலை பார்ப்பீர்கள். சிலருக்கு வேலை மாறுதல் பதவி உயர்வு அடைவீர்கள். புதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். புதிய ஆர்டர்களை பெறுவதில் வெற்றியடைவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். குரு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். அதிக ஆசை ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். பிரிந்து போன உறவுகளை சேர்ப்பதில் முனைப்பு காட்டுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு திருமண ஏற்பாடு செய்வீர்கள். சனி 12 ஆம் வீட்டில் இருக்கிறார். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறப்பாக நடக்கும். கட்டுமான தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ராகு ராசியிலேயே அமர்ந்திருக்கிறார் மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். கேது 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். புரிந்துணர்வு இல்லாமல் சிலர் விவாகரத்து பெறுவார்கள்.